Categories
தேசிய செய்திகள்

நூலகத்தில் அடிப்படை வசதியை ஏற்படுத்த கோரிய வழக்கு… மதுரை உயர் நீதிமன்றம் சொன்னது என்ன…?

உலக தமிழ் சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும் நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் கூடிய வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் மனுதாரர் தரப்பில் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கூறப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மேலூர் எட்டி மங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் மதுரையில் உலக தமிழ் சங்கம் திறக்கப்பட்ட நான்கு வருடங்களுக்கு மேலாகவும் தமிழ் மொழி வளர்ப்பிற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.

நூலகத்தின் தரமான நூல்கள் இல்லை உலக தமிழ் சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள் தமிழ் ஆராய்ச்சி நூல்கள் தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும் நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த மனு மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மதுரை தமிழ் சங்கத்தின் துணை இயக்குனர் பேரில் ஆஜராகி புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் தமிழை வளர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அத்தகைய நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் விதமாக மதுரை உலக தமிழ் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ் சங்கத்தில் 26 ஆயிரத்து 35 நூல்கள் இருக்கிறது. பதிப்பிக்கும் நூலின் ஒரு நகலை உலக தமிழ் சங்கத்திற்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலே இத்தனை நூல்களும் பெறப்பட்டிருக்கிறது. மேலும் 2017,2018 இல் நூலகத்தை அமைப்பதற்காக ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த 2018 ஆம் வருடம் பிப்ரவரி 5ஆம் தேதி அதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை புத்தகங்களை வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என கூறியுள்ளார். இந்த நிலையில் மனுதாரர் தரப்பில் உலக தமிழ் சங்கத்தில் நூலகம் அமைக்க ஆறு கோடி ஒதுக்கீடு செய்ய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இதுவரை செயல்படுத்தப்படாமல் இருக்கிறது என கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து நீதிபதிகள் தமிழகத்தில் இத்தனை வருடங்களில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாத திட்டங்களை கணக்கிட்டால் அது கணக்கீடு செய்யாத அளவில் இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர். அப்போது மனுதாரர் திறப்பில் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது இதனை ஏற்ற நீதிபதி ஒரு மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Categories

Tech |