விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான லைகர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த செய்தி வெளியாகி இருக்கின்றது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மைக் டைசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டப்படி படம் வெளியானது.
இந்த நிலையில் படத்தை பார்த்தவர்கள் விஜய்யின் நடிப்பை தவிர இதில் ஒன்றுமே இல்லை என்று கூறுகின்றார்கள். மேலும் எதிர்பார்த்த அளவிற்கு இத்திரைப்படம் இல்லை என இணையத்தில் விளாசி வருகின்றார்கள் ரசிகர்கள்.
படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களே குவிந்த நிலையில் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 14 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாகவும் ஹிந்தியில் 5 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாகவும் செய்தி வெளியாகியிருக்கிறது.
மொத்தமாக இத்திரைப்படம் முதல் நாளில் மட்டும் 20 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகின்றது. உலகம் முழுவதும் வெளியான அமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படமே 15 கோடி மட்டுமே முதல் நாளில் வசூல் செய்த நிலையில் அத்திரைப்படத்தை விட லைகர் கூடுதலாக வசூல் செய்து சாதனை படைத்தது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.