23 கிலோ மீட்டர் தொலைவுள்ள மருத்துவமனைக்கு வெறும் 30 நிமிடத்தில் மெட்ரோ ரயில் மூலம் இதயம் கொண்டு சொல்லப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் வசிப்பவர் விவசாயியான நரசிம்ம ரெட்டி. இவர் சாலை விபத்து ஒன்றில் மூளைச்சாவு அடைந்துள்ளார். இதையடுத்து இவருடைய உடல் உறுப்புகளை அவருடைய குடும்பத்தினர் தானமாக கொடுக்க முன் வந்துள்ளனர். இந்நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மூளைச்சாவு அடைந்த விவசாயியின் இதயம் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சாலை வழியாக கொண்டு சென்று போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டது.
எனவே மருத்துவமனை ஊழியர்கள் ஐதராபாத் மெட்ரோ ரயில் மூலம் கொண்டு செல்ல முடிவு எடுத்துள்ளனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு இதயம் அங்கிருந்து மெட்ரோ ரயில் மூலமாக 23 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு 30 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.