நீயா நானா ஷோவில் வாரம்தோறும் ஒரு வித்தியாசமான தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகின்றது. இந்த வாரம் விவாதத்தின் போது வெளியான வீடியோக்கள் அனைத்தும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் ஒரு பக்கம். அவர்களின் கணவர்கள் மற்றொரு பக்கம் என்று விவாதம் நடைபெற்றது. அதில் ஒரு தந்தை தான் அதிகம் படிக்கவில்லை. நான் எடுக்காத மார்க்கை என் மகள் எடுப்பதை பார்த்து நான் ரசித்தேன் என்று கூறினார்.
மேலும் என் மகளுக்கு டாக்டராக வேண்டும் என்ற ஆசை அதை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்தார். அப்போது அவரின் மனைவி அவருக்கு ப்ரோக்ரஸ் கார்டில் கையெழுத்து போட கூட தெரியாது. அதை வைத்து ஏபிசிடி படித்துக் கொண்டிருப்பார் என்று நக்கலாக பேச சற்று என்று கோபிநாத் நீயா நானா ரூல்சை மாற்றி ஷோவின் இடையிலேயே சிறந்த தந்தையின் கிப்ட் கொடுப்பதாக அறிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த நெடிசன்கள் பலரும் அப்பாவை பாராட்டி வருகின்றனர்.