Categories
மாநில செய்திகள்

“நெசவு 2022” கைத்தறி கண்காட்சி… தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் ….!!!

‘நெசவு 2022’ கைத்தறி கண்காட்சியை சென்னையில் உள்ள மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் சனிக்கிழமை தொடங்கி வைத்துள்ளார்.

சென்னை நந்தனம் அண்ணாசாலையில் அமைந்துள்ள டெம்பிள் டவர்  கட்டிடத்தில் 13 ஆயிரம் சதுர அடியில் முழு குளிரூட்டப்பட்ட விற்பனையகத்தை மத்திய குடிசை தொழில் கழகம் கொண்டிருக்கிறது. இங்கு இந்திய  கைத்தறி தயாரிப்புகள் கைவினை திறனை ஊக்குவிக்கும் முயற்சியில் நெசவாளர்களின் கைவினைப் பொருட்களை கொண்ட‌ “நெசவு2022″கைத்தறி கண்காட்சிக்கு மத்திய குடிசை தொழில் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது. டெம்பிள் டவர் கட்டிடத்தில் உள்ள ஷோரூமில் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியை மத்திய இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் சனிக்கிழமை தொடங்கிவைத்து பார்வையிட்டுள்ளார்.

காலை10.30மணி முதல் இரவு 8மணி வரை காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டுக்கொள்ளலாம். இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பிரத்தியேகமான கையால் செய்யப்பட்ட புடவைகள், நகைகள், துணிகள், ஆடைகள், அணிகலன்கள் போன்ற பல்வேறு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஜவுளி அமைச்சகத்தின் வளர்ச்சி ஆணையர் அலுவலகம் இந்த காட்சிக்கு நிதியுதவி அளித்திருக்கிறது. இந்நிலையில் முன்னதாக சனிக்கிழமை   சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் 10 ஆவது பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் பங்கேற்றுள்ளார்.

அப்போது பல்வேறு பிரிவுகளில் 268 மாணவர்களுக்கு பதக்கங்களையும் அவர் வழங்கியுள்ளார். மேலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள், ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள் போன்றவற்றை  மத்திய இணையமைச்சர் வழங்கி பாராட்டியுள்ளார். இந்த பட்டமளிப்பு விழாவில் கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு ஆணையரும், தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் தலைமை இயக்குனருமான சாந்தாமனு, இயக்குனர் அனிதா மனோகர், கல்விப் பிரிவு தலைவர் வந்தனா நரங்  போன்றோர் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |