மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு திமுக தலைவர் தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் தனது 66வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடிகர் கமல்ஹாசனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “முத்தமிழ் அறிஞர் கலைஞரால் கலைஞானி என்று போற்றப்பட்ட எனது நெஞ்சம் நிறைந்த அன்புக்குரிய நண்பர் கமலஹாசனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நலமுடன் நீண்ட காலம் வாழ வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.