துளசி நிறைய மருத்துவ குணங்களை கொண்ட ஒரு தாவரம் .இது சளியை முறிக்கும் என்று அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதனை எப்படி ரசம் வைத்து சாப்பிடலாம் என்பதை பற்றி இதில் பார்ப்போம்.
துளசியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு பொருள். துளசி மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கும். குழந்தைகளுக்கு காய்ச்சல் இருமல் சளி இருக்கும் போது இதனை கிராமப் புறத்தில் இருப்பவர்கள் என்று சாப்பிட கொடுப்பார்கள். ஏனெனில் இதில் பல நன்மைகள் உள்ளது.
துளசி பல நோய்களுக்குத் தீர்வு. கிடைக்கும் போது வாயில் போட்டு மெல்லலாம், டீயில் போட்டு குடிக்கலாம். இப்படி நிறைய பயன்களை கொண்டது. துளசி பற்றியும் அதன் மருத்துவக் குணங்களைப் பற்றியும் நாம் அறிந்திருப்போம். நீண்ட நாள் கட்டியிருக்கும் சளியை நீக்க இதனை எப்படி பயன்படுத்துவது என்பதை இதில்பார்ப்போம். இந்த துளசி ரசத்தை மார்புசளி உள்ளவர்களுக்கு வைத்துக் கொடுத்தால் மார்பில் இருக்கும் கோழை, சளி எல்லாம் வெளியேறி மூச்சு விட எளிதாக இருக்கும்.
தேவையான பொருள்:
துளசி இலை காம்பு நீக்கி கழுவியது – ஒரு கப்,
மிளகு – 2 டீஸ்பூன்,
சீரகம், – ஒரு டீஸ்பூன்,
துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி விதை – ஒரு டீஸ்பூன்,
புளி – எலுமிச்சை பழ அளவு,
பெருங்காயம் – சிறிதளவு,
கடுகு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தாளிப்பதற்கு
செய்முறை:
முதலில் மிளகு, சீரகம், தனியா, துவரம்பருப்பு ஆகியவற்றை அரை மணி நேரத்திற்கு முன்பாக ஊறவைக்கவேண்டும். துளசியை தனியாக மைபோல அரைத்துக் கொள்ள வேண்டும். புளியை நன்றாக கரைத்து வடிகட்டி கொள்ளுங்கள். அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். ஊறவைத்த சீரகம், பருப்பை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் ஆக்கி அதையும் புளிகளோடு கலந்து கொள்ளுங்கள்.
பின்பு அடுப்பில் மிதமான தீயில் ஒரு கொதி வந்ததும் தீயைக் குறைத்து கொள்ளுங்கள். அரைத்து வைத்திருக்கும் துளசியை அதில் சேர்த்து குறைந்த தீயில் 5 நிமிடம் ரசம் நுரை பொங்கி மேலே ஆரம்பிக்கும். அப்போது அடுப்பை அணைத்து விடுங்கள். அதற்குமேல் கொதிக்க வைக்க வேண்டாம். பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கருவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
இதனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வாரத்திற்கு ஒரு முறை சேர்த்து வந்தால் அவர்களுக்கு நெஞ்சு சளி, கோழை போன்றவை நீங்கும்.