புதுக்கோட்டை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் நெஞ்சு வலியால் தீடிரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் இலுப்பூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் புதுக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர் பணி முடிந்ததும் விராலிமலைக்கு வந்துள்ளார்.
இதனையடுத்து வீட்டிலிருந்த அவரது மனைவியிடம் நெஞ்சு வலிப்பதாக மோகன்ராஜ் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி உடனடியாக விராலி மலையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு மோகன்ராஜ்யை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.