Categories
தேசிய செய்திகள்

நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…. காதலியை கொடூரமான முறையில் கொலை செய்த காதலன்…. போலீசார் அளித்த அதிர்ச்சி தகவல்….!!!!

வாலிபர் தனது காதலியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகரில் சந்தோஷ் தமி  என்பவர் வசித்து வருகிறார். இவர்  நேபாள நாட்டை சேர்ந்த கிருஷ்ண குமாரி என்ற  பெண்ணுடன் லிவ்-இன் முறையில் பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று திடீரென கிருஷ்ண குமாரி வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து துணை காவல் ஆய்வாளர் பீமாசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது. இவர்கள் 2 பேருக்கும்  இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் தமி  சுவரின் மீது அந்த பெண்ணின்  தலையை மோத செய்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர் என கூறியுள்ளார்.

Categories

Tech |