Categories
மாநில செய்திகள்

“நெஞ்சை பதற வைக்கும் கொடூர விபத்து”….!! 5 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர் உடல்….!!

திண்டுக்கல் அருகே பைக் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற வாலிபர் 5 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோர் பாடி பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்ற இளைஞர் வேலைக்கு செல்வதற்காக நேற்று இரவு திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது வேல்வார்கோட்டை பிரிவு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி ஒன்றின் மீது மோதி உள்ளார். இந்நிலையில் லாரி நிற்காமல் வேகமாக சென்றதால் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை லாரிக்கு அடியில் குணசேகரன் உடல் சிக்கி இழுத்து செல்லப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் சிலர் லாரியை மடக்கிப்பிடித்து லாரியின் அடியில் இருந்த குணசேகரனின் உடலை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |