2017 முதல் 21 ஆம் ஆண்டுகளில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலை துறையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அப்போது 2019 – 21 ஆம் ஆண்டு வரையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தலைமை செயலர், நெடுஞ்சாலைத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை போன்றவற்றிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் கடந்த ஜூலை 22 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சாலைகளை மீண்டும் போடுவதற்கு டெண்டர்களில் திட்ட மதிப்பு அதிகப்படுத்தப்பட்டு இருந்தாலும் அரசுக்கு 692 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக புகாரில் குறிப்பிட்டிருந்தது.
இது தொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தது. இதனால் தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறி அறப்போர் இயக்கம் அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் போன்றவருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மானநஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளார். அவதூறு கருத்துக்களை வெளியிட்டதற்காக மானநஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடவும் தனக்கு எதிரான உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிடவும் அறப்போர் இயக்கத்திற்கும் அதன் நிர்வாகிகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மனு நீதிபதி கிருஷ்ணசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு பற்றி அறப்போர் இயக்கம் மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கின்றது. அதனை தொடர்ந்து இந்த கருத்துக்களை வெளியிட இடைக்கால தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அறப்போர் இயக்கத்தின் தகவல்கள் அனைத்தும் வெளியாகிவிட்டதால் தடை விதிக்க அவசியம் இல்லை எனக் கூறிய நீதிபதி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டால் அதனை நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரும்படி எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு அறிவுறுத்தி இருக்கின்றார்.