கனடாவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் ரிச்மண்ட் ஹில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் இந்த நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி ஒன்று எதிரே வந்த இரண்டு கார்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணையும், ஒரு ஆணையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த விபத்து ஏற்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து ஏதாவது தகவல் தெரிந்தால் அதனை தங்களிடம் தெரியப்படுத்தவும் என்று காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.