Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நெடுஞ்சாலையில் நிர்வாணமாக… திடீரென ஒரு சித்தர்….. என்ன நடக்கிறது?…. அதிர்ச்சி சம்பவம்….!!!

கரூர் மாவட்டம் மலைக்கோவிலூர் பகுதியில் சுப்பிரமணி என்ற நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரம் சுற்றி வந்துள்ளார்.அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் அவரை நெடுஞ்சாலை சித்தர் என்ற பெயரில் சாமியாராக மாற்றி கொட்டகை அமைத்து தங்க வைத்துள்ளனர்.அது மட்டுமல்லாமல் உடம்பில் ஒட்டு துணிவும் இல்லாமல் நிர்வாணமாக உடல் முழுவதும் விபூதியை பூசி அவரை சித்தர் என பொதுமக்கள் நம்ப வைத்துள்ளனர்.

அதனை நம்பி அவரை வழிபட பொதுமக்கள் பலர் அங்கு சென்று குவிக்கின்றனர். அவர்களிடம் அந்த நபர்கள் உண்டியல் வைத்து பணம் வசூல் செய்கிறார்கள்.இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவரை மீட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |