Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

நெட்ஃபிளிக்ஸ் விவகாரம்… “விக்கி மீது கடும் கோபத்தில் உள்ள நயன்”…!!!!!

நெட்ஃபிளிக்ஸ் விவகாரத்தில் தனது கணவர் மீது நயன்தாரா கடும் கோபத்தில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. எனவே ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்று ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தனர்.

இந்த நிலையில் தான் சமீபத்தில் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார் நயன்தாரா. அதன்படி விக்கி -நயன் இருவரின் திருமணமும் கடந்த 09ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் தங்களுடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய நடிகர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விக்னேஷ் சிவனுக்கு தாலி எடுத்துக் கொடுக்க  திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருமணத்தில் வீடியோ கவரேஜ் உரிமையை 25 கோடி ரூபாய் கொடுத்து  நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியது. இதனால் திருமணத்திற்கு வருபவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது, அரங்கத்திற்குள் போட்டோ எடுக்க கூடாது என பல கட்டுப்பாடுகள் இருந்தது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் செய்த செயலால் நெட்ஃபிளிக்ஸ்  நிறுவனம் மிகவும் கோபத்தில் உள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

காரணம் என்னவென்றால் விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணத்தை ஸ்ட்ரீம் செய்ய நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் மறுத்து விட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அண்மையில் விக்னேஷ் சிவன் தனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடும் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ள நிலையில் விக்கி செய்த காரியத்தால்  ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் செய்த காரியத்தால் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு 25 கோடி ரூபாய் திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நயனும் விக்கியும் உள்ளனர். இதனால் தன் கணவர் மீது நயன்தாரா மிகவும் கோபத்தில் இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

Categories

Tech |