ஸ்ருதிஹாசனிடம் நெட்டிசன் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில், ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழ் சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஸ்ருதிஹாசன். இவர் கமலின் மூத்த மகள் ஆவார். இவர் இசைக்கலைஞரான சாந்தனும் ஹசாரிகா என்பவரை காதலித்து அவருடன் லிவ்விங் டுகெதர் முறையில் மும்பையில் வாழ்ந்து வருகின்றார். ஸ்ருதிஹாசன் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். அவ்வபோது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றார்.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலதித்து கொண்டிருந்த போது நெட்டிசன் ஒருவன் உங்களின் லிப் சைஸ் என கேள்வி கேட்க அதற்கு சற்றும் தயங்காமல் உடனடியாக ஒரு செல்பி எடுத்து பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீபகாலமாகவே நடிகைகளிடம் இது போன்ற அநாகரிகமான கேள்விகள் கேட்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.