நடிகை யாஷிகா நெட்டிசனின் ஏடாகூட கேள்விக்கு பதில் அளித்துள்ளர்.
துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் பிக் பாக்ஸ் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் அண்மையில் கார் விபத்து ஏற்பட்டதில் இவரின் தோழி உயிரிழந்த நிலையில் இவருக்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் இணையதளவாசி ஒருவர் நீங்கள் குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளான வழக்கு என்னவாயிற்று? உங்கள் தோழியை கொன்ற பிறகு இப்போது எப்படி உணருகிறீர்கள்? என ஏடாகூடமாக கேட்க அதற்கு யாஷிகா கூறியுள்ளதாவது, அது நான் குடித்துவிட்டு ஏற்பட்ட விபத்து இல்லை. நான் சுயநினைவு இல்லாமல் இருந்ததால் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன். நான் குடிக்கவில்லை என ரிப்போர்ட் கூட வந்துவிட்டது. சரியான தகவல்கள் இல்லாமல் வதந்தியைப் பரப்ப வேண்டாம். இந்த எலும்பு முறிவு எல்லாம் ஏற்படாமல் நான் போய் சேர்ந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என வருத்தத்துடன் பதிலளித்து, சிறிது நேரத்திலேயே தன்னுடைய பதிவை நீக்கியுள்ளார் யாஷிகா.