Categories
Tech டெக்னாலஜி

நெட்பிளிக்ஸ் பயனர்களே!…. இனி இப்படி செய்ய முடியாது?…. புது அம்சம் அறிமுகம்…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!!

நெட்பிளிக்ஸ் பயனாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது. ஒருவர் நெட்பிளிக்ஸ் சந்தாவை வாங்குவதும், அவரது 6-7 நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அக்கணக்கை பயன்படுத்துவதும் பொதுவாக நடக்கும் ஒரு விஷயம் ஆகும். இந்த அடிப்படையில் ஒரு கனெக்‌ஷன் வாயிலாக பல பேர் புதிய திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கிறோம். சில நேரம் கணக்கின் பாஸ்வேர்டு நண்பர்களிடம் மட்டுமின்றி  நண்பர்களின் நண்பர்கள் வரைகூட செல்வது உண்டு.

ஒருமுறை பாஸ்வர்ட் கிடைத்துவிட்டால் சந்தா பெற்ற நபர், பாஸ்வர்டை மாற்றும்வரை பிறர் தங்களுக்கான சந்தாவை பெறுவது பற்றி யோசிப்பதுகூட கிடையாது. ஆனால் இனிமேல் இவ்வாறு செய்ய முடியாமல் போகலாம். நெட்பிளிக்ஸ் ஒரு புது அம்சத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இவற்றில் சந்தா கட்டிய நபர், தான் கணக்கை பகிர்ந்துகொள்ள விரும்பாதவர்களின் பெயர்களை தன் கணக்கில் இருந்து அகற்றும் வசதியானது வழங்கப்படுகின்றது. ஒரே கிளிக்கில் மற்ற பயனாளர்களை உங்களது கணக்கிலிருந்து நீக்கும் வசதியை நெட்பிக்ஸ் கொண்டு வந்திருக்கிறது. நிறுவனம் ஒரு வலைப்பதிவு இடுகை வாயிலாக இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

Categories

Tech |