Categories
உலக செய்திகள்

நெதர்லாந்து நாட்டுக்கான அமெரிக்க தூதராக… இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்…. செனட் சபை ஒப்புதல்…!!!!!

நெதர்லாந்து நாட்டிற்கான அமெரிக்க தூதராக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஷெபாலி ரஸ்தான் துக்கால்(50) என்ற பெண் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான முறையான ஒப்புதலை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை வழங்கி இருக்கிறது. காஷ்மீரி பண்டிட் இனத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவில் இன்றைய உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்வாரில் பிறந்திருக்கின்றார். தனது இரண்டு வயது முதலே குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறியுள்ளார். அங்குள்ள மியாமி பல்கலைக்கழகத்தில் பட்டமும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றுள்ளார். இந்த நிலையில் தனது நியமனம் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் செனட்சபையின் வெளியுறவு குழு விசாரணை மேற்கொண்ட போது இவர் நான் இந்தியாவில் பிறந்தேன் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டேன் என குறிப்பிட்டது நினைவு கூறுதக்கதாகும்.

அதுமட்டுமல்லாமல் சின்சினாட்டியில் என்னை வளர்த்தெடுத்தவர் என் அம்மா என் அப்பா என் இளம் வயதிலேயே பிரிந்து சென்று விட்டார்கள். அது என் வாழ்க்கையின் திசையை ஆழமாகவும் நிரந்தரமாகவும் பாதித்தது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்காவைப் பற்றி அவர் பேசும்போது இரக்கம், பச்சாதாபம், நேர்மை மற்றும் வியர்வை சமத்துவம் போன்றவை நமது நாட்டில் ஏதோ ஒன்றை குறிப்பிடுகின்றது என்பதை எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் நம்மை நம்பிக்கை மற்றும் சுதந்திரத்தின் கலங்கரை விளக்கமாக பார்க்க இதுவே காரணமாகும். எனது கதை தனித்துவமானது இல்லை என்றாலும் கூட இது அமெரிக்க உணர்வு மற்றும் அமெரிக்க கனவின் எல்லையற்ற சாத்தியக் கூறுகளை பிரதிபலிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |