ரஷ்யாவுக்கு தேவையான பெரும்பாலான ராணுவ ஆயுதங்களை உக்ரைன் தான் தயார் செய்து கொடுத்து வந்த நிலையில், உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக தற்போது உக்ரைனில் இருந்து ஆயுதங்கள் அனுப்பப்படாததால் ரஷ்ய வீரர்கள் திணறி வருவதாக தெரியவந்துள்ளது. உக்ரைன் வீரர்கள் துணிச்சலோடு செயல்பட்டு ரஷ்ய வீரர்களை தலைநகரிலிருந்து வெளியேற்றி விட்டனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடங்கிய நாள் முதல் இதுவரை 143 விமானங்கள், 131 ஹெலிகொப்டர்கள், 625 டாங்கிகள், 316 பீரங்கிகள் என ரஷ்யா இழந்துள்ளது.
இதுவரை ரஷ்யாவிற்கு தேவையான க்ரூயிஸ் ஏவுகணைகள், ஹெலிகொப்டர் எஞ்சின் பாகங்கள் மற்றும் போர் ஜெட் விமான பாகங்கள் போன்றவை உக்ரைனில் இருந்து தான் தயார் செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன. போர் காரணமாக இவை அனுப்பப்படுவதால் ரஷ்ய வீரர்கள் திணறி வருகின்றனர். அதோடு ரஷ்யா மீதான பொருளாதார தடை காரணமாக வேறு எந்த நாட்டிலிருந்தும் ரஷ்ய ராணுவ தளவாடங்களை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் ரஷ்யா கடுமையான சிக்கலை சந்தித்து உள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள் கூறியுள்ளனர்.