வைகை ஆற்று நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலகப்புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றதால் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதி உதவி வழங்க முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும்படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்த 11 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.