Categories
உலக செய்திகள்

நெரிசலில் சிக்கி 44 நபர்கள் பலி…. இஸ்ரேலில் நடந்த மத திருவிழா…. பிரார்த்தனை செய்யும் பிரதமர்….!!

இஸ்ரேலில் நடந்த மத திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டதால், கூட்டத்தினுடைய நெரிசலில் சிக்கி குறைந்தபட்சமாக 44 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலில் கொரோனாவிற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீங்கியதையடுத்து பிரான்மலையினுடைய அடிவாரத்தில் லாக் ஹோமர் என்ற திருவிழா நடந்தது. இதில் சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி படுகாயமடைந்த சுமார் 103 நபர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியதில் 38 நபர்கள் கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 44 நபர்கள் கூட்ட நெரிசலினுள் சிக்கி நசுங்கி உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்தப்பகுதியை முடக்கி தங்களுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த நிலையில் பொதுமக்களை பேருந்து மூலமாக பத்திரமாக வெளியேறுங்கள் என்றும் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த பேரளவிற்காக இஸ்ரேலினுடைய பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.

Categories

Tech |