படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் காவிரிக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர மக்களின் வீடுகளை வெள்ளம் நீர் சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக நெரிஞ்சிப்பேட்டை முதல் பூலாம்பட்டி வரையிலான படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த பகுதியில் தற்போது வெள்ளப் பெருக்கு குறைந்ததன் காரணமாக மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. மேலும் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.