Categories
அரசியல் மாநில செய்திகள்

நெருக்கடிகளுக்கு அஞ்சாமல்…. திசை திருப்புதலில் சிக்காமல்…. வெற்றி பெறுவோம் என்று ஸ்டாலின் சூளுரை …!!

முத்தமிழறிஞர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் எழுதியுள்ள உங்களில் ஒருவன் மடலில் எத்திசை திரும்பினாலும் தனக்கு தலைவர் கலைஞர் திரு முகம் தான் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார். இயக்கத்திற்காக எந்த பணியையும் மேற்கொண்டாலும் அவர் நினைவு தான் நெஞ்சத்தை வருகிறது என்றும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் நிழலில் வளர்ந்த மகன் என்பதை விட  கலைஞரின்  குரலின் கட்டளைகளை ஏற்று  சிப்பாயாய் கலைஞரின் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் ஒருவன்,

அரை நூற்றாண்டு காலம் அவர் தலைமையேற்று கட்டி வளர்த்த இயக்கத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றிருக்கும் உங்களில் ஒருவன் என்பது மனதிற்கு இன்பத்தை தருகிறது என்று கூறியுள்ளார்.நெருக்கடிகளுக்கு அஞ்சாமல் திசை திருப்புதலில் சிக்காமல் கொள்கை பாதையில் வலிமையுடன் பயணித்து மக்களின் பேராதரவுடன் வெற்றிப்பயணம் பெற்றிடுவோம் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேர்தல் களத்தில் அந்த வெற்றியை உறுதி படுத்தி அதனை ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் திருவடிகளில் காணிக்கையாகும். அது வரை ஓயாமல் உழைப்பதே அந்த ஓய்வறியா சூரியனுக்கு நாம் செலுத்தும் நினைவேந்தல் ஆகும் என்று ஸ்டாலின்  கூறியுள்ளார்.

Categories

Tech |