தனியார் வங்கி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கணவன்-மனைவி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள காளிச்செட்டிபட்டியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் சொந்தமாக லாரி வாங்க வேண்டும் என்று பரமத்திவேலூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தன்னிடம் இருந்த 3 லட்சத்தையும் சேர்ந்து 10 லட்சத்திற்கு லாரி ஒன்றை வாங்கி லோடு ஏற்றி வந்துள்ளார். இதனையடுத்து கொரோனா ஊரடங்கு காரனத்திளாலும், டீசல் விலையின் உயர்வினாலும் சரியாக லோடு கிடைக்காமல் இருந்துள்ளது.
இதனால் வங்கி தவணை தொகையை செலுத்த முடியாமல் இருந்துள்ளார். தற்போது வரை மணிகண்டன் வங்கியில் வாங்கிய கடன் தொகை வட்டியுடன் 3 லட்சம் வரை செலுத்தியதாக கூறப்படுகின்றது. இதனைதொடர்ந்து மணிகண்டன் வட்டியை செலுத்தாமல் இருந்ததால் தனியார் வங்கி இவருடைய லாரியை பறிமுதல் செய்து 3 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர். மேலும் மீதமுள்ள கடன் தொகையை செலுத்துமாறு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் லாரியினர் தற்போதைய மதிப்பு 7 லட்சம் ரூபாய் இருக்கும் என்றும், கூடுதல் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக மணிகண்டன் கூறியுள்ளனர்.
இதனால் தனியார் வங்கி நிர்வாகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணிகண்டன் மற்றும் அவரது மனைவி பொன்மணி இருவரும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்து அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதனை பார்த்த அங்கிருந்த காவல்துறையினர் இவர்களை தடுத்தி நிறுத்தியுள்ளனர். மேலும் மணிகண்டன் மற்றும் பொன்மணியை நல்லிபாளையம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.