நெருக்கத்தில் இருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். (சங்கீதம் 118: 5)
யோனா என்ற தேவ ஊழியன் கர்த்தருக்குப் பிரியமானதாக வாழ்ந்த போதிலும், ஆண்டவர் கூறின திசையிலிருந்து வேறு திசைக்குத் தன்னை திருப்ப துணிகரம் கொண்டபோது, கர்த்தர் அப்படியே விட்டுவிடவில்லை, பல துன்பங்களை அவர் அடையும்படி தன் குறைவை உணரும்படி செய்தார்.
மீனின் வயிற்றுக்குள் விழுங்கப்பட்ட யோனா, அங்கிருந்து கர்த்தரை நோக்கி கெஞ்சினான். அவனுடைய விண்ணப்பம் ஆண்டவருடைய பரிசுத்த ஆலயத்தில் வந்து சேர்ந்த பொழுது ஆச்சரியமாக கர்த்தர் வழி திறந்து அவன் வெளியே வரும்படி செய்தார். மறுபடியும் அதே ஊழியத்தை நிறைவேற்றி வைக்கவும் அவர் வழிநடத்தினார்.
ஆம் நம்முடைய ஆண்டவர் நெருக்கத்தில் இருக்கிற தம்முடைய ஜெபத்தை கேட்டு, கூக்குரலை அங்கீகரித்து நாம் விரும்பிய வழியில் நம்மை நடத்த வல்லமை உள்ளவர். இன்று நீங்கள் யோவானே போல கர்த்தருடைய வார்த்தையை கேளாமல் நிறுத்தத்தில் மாற்றிக்கொள்ளாத நெருக்கம் வந்தாலும் இயேசு போதும் என்று அவரை நோக்கி பார்க்க கற்றுக் கொள்ளுங்கள் அப்பொழுது ஆண்டவர் விடுதலை கொடுத்து உங்களை ஆசீர்வதிப்பார்.
ஒரு இளம் தம்பதியர் திருமணம் முடிந்து அடுத்த ஆண்டு, திருமண நாள் அன்று ஒருவருக்கொருவர் வெகுமதி கொடுக்க விரும்பினார். ஆனால் பணமும் கொஞ்சம் இல்லை நெருக்கமான வாழ்வு! இதில் எப்படி பரிசு கொடுப்பது? என்று ஒரே கவலை.
ஒருவருக்கொருவர் தெரியாமல் இருவரும் கர்த்தரை நோக்கி மன்றாடினார். அந்த நெருக்கத்தை மாற்றி எப்படியாவது எங்களுக்கு இன்று விருப்பத்தை நிறைவேற்றும் என்றி ஜெபித்தார். அப்போது நடந்தது என்ன தெரியுமா? அவர்கள் திருமணத்திற்கு வர முடியாத ஒரு உறவினர் வெளிநாடு ஒன்றில் இருந்து இந்த முதலாவது திருமண நாள் என்று அவர்களுக்கு ஒரு வெகுமதியயை பணமாக அனுப்பி வைத்தார்.
அதை பார்த்த உடனே அவருக்கு ஒரே மகிழ்ச்சி! அதனை வைத்து இரண்டு பேரும் தங்களது திருமண நாளை சந்தோஷமாக கொண்டியதோடு ஒருவருக்கு ஒருவர் வெகுமதி கொடுக்கவும் கர்த்தர் அவர்களுக்கு நெருக்கத்திலே உதவி செய்தார்.இளம் வயதிலேயே ஆண்டவருடைய வல்லமையை அவர்கள் உணர்ந்து கொள்ளும்படி அருள் புரிந்தார்.
ஆம் அன்பானவர்களே! என் நெருக்கம் வந்தாலும் ஒன்றுக்கும் பயப்படாதிருங்கள். கர்த்தரை நோக்கி பார்த்து அவர் சமூகத்தை உங்கள் சஞ்சலங்களை ஊற்றுங்கள். அவர் உங்களுக்காக யுத்தம் செய்வார். ஆசீர்வதித்து வழிநடத்துவார். நீங்கள் அற்புதங்களை காணும்படி செய்வார்.