தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டில் அதிமுக சார்பாக போட்டியிட ஜானகிராமன் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை ஜானகிராமன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜானகிராமனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.