Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நெருங்கி வரும் கோடை சீசன்…. அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள்….!!

கோடை காலம் நெருங்கி வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கிறது. இங்கு கண்காட்சிகள் மற்றும் கோடை விழாக்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஊட்டியில் இருக்கும் அரசு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை அமைந்துள்ளது. இதில் கள்ளிச்செடிகள், பெரணி இல்லம், இலை பூங்கா, இத்தாலியன் பூங்கா, ஜப்பான் பூங்கா போன்றவை அமைந்துள்ளது. இந்த கண்ணாடி மாளிகையில் இருக்கும் வண்ண வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பின் மலர்களின் அருகில் நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

இதனையடுத்து பெரிய புல்வெளி மைதானம் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஓய்வு எடுத்து மகிழ்ந்தனர். ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் மிதி படகு, துடுப்பு படகு மற்றும் மோட்டார் படகுகளில் பயணம் செய்தனர். இங்குள்ள ஏரியின் நடுவே செயற்கை நீர் வீழ்ச்சியின் மூலமாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது . அதன்பிறகு சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செய்தும், தொட்டபெட்டா மலைச் சிகரத்தில் இருந்து உயரமான மலையை பார்த்து ரசித்தனர். மேலும் கோத்தகிரி பகுதியில் அமைந்திருக்கும் தொலைநோக்கி மூலமாக இயற்கை வளங்களை பார்த்து ரசித்தனர். இதேப்போன்று மாவட்டத்தின் பல இடங்களில் இருக்கும் சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கோடை சீசனை அனுபவித்து வருகின்றனர்.

Categories

Tech |