Categories
தேசிய செய்திகள்

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்…. உ.பி.க்கு 4வது முறையாக பயணம் மேற்கொள்ளும் பிரதமர்….!!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்ததேர்தலுக்காக மத்திய பாஜக அரசு மற்றும் உத்திரப்பிரதே முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த 19ஆம் தேதி மூன்று நாள் பயணமாக உத்திரபிரதேசம் சென்றார். இந்த மூன்று நாட்களில் ஜான்சியில் ரூ.3,425 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். அதனை போல டிஜேபிக்கள் மாநாடு போன்ற பல்வேறு அரசு விழாக்களில் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி உடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து முதல்வர் யோகி தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த கவிதையின் மூலம் ‘புதிய இந்தியாவை உருவாக்க ஆலோசனையில் ஈடுபட்டிருந்தோம்’ என்று அவர் தெரிவித்தார். மேலும் முதல்வர் யோகின் தோளில் கைபோட்டபடி நடந்து கொண்டு மோடி ஆலோசனை வழங்கிய புகைப்படங்களை வெளியிட்டார்.

அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி என்று நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜெவாரில் சர்வதேச விமான நிலைய பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும் உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு வரும் தேர்தலுக்காக பிரதமர் அடிக்கடி பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஒரு மாதத்தில் நான்காவது முறையாக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

Categories

Tech |