நேற்று முன்தினம் ஓசூர் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஓசூர் மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு நேற்று முன்தினம் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்த இந்த தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஓசூர் அரசு ஐ.டி ஐ. என்.எஸ்.எஸ். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் ஓசூர் மாநகராட்சியில் உள்ள சில முக்கிய வீதிகள் வழியாக சென்று ஓசூர் பஸ் நிலையம் அருகே நிறைவடைந்தது. இதற்கு முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கையெழுத்திட்ட நிலையில் உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர்.