வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று மாலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புரேவி புயலாக வலுவடைகிறது. நாளை மறுநாள் புயல் இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தற்போது காரைக்காலுக்கு கிழக்கு தென் கிழக்கே 975 கிமீ தூரத்தில் இல்லை கொண்டுள்ளது. இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதனால் நாகை, கடலூர், காரைக்கால், எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமன்று மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.