உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக அமையும் நெருஞ்சி முள்ளின் உள்ள அற்புத பயன்கள் பற்றி தெரிந்து.
உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும், சிறுநீரக பிரச்சனைகளுக்கு நெருஞ்சி முள் அருமருந்தாக அமைகிறது. நெருஞ்சி இலையில் இருக்கும் இரும்பு சத்து, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை சிறுநீரக கோளாறுகள் போன்றவற்றை சரி செய்கிறது. நெருஞ்சி முள்ளை சேகரித்து பசும்பாலில் வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் பாலுடன் சேர்த்து காலை மாலை என இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் ஆண்மை விருத்தியடையும்.
இது ரத்தத்தை சுத்திகரிப்பது, சிறுநீர் தடையின்றி செல்வதற்கு வழி வகை செய்கிறது. நெருஞ்சி செடி மற்றும் அருகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து அதை மண் சட்டியிலிட்டு நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர கண் எரிச்சல், கண் சிவப்பு, கண்ணில் நீர் வடிதல் மற்றும் உடல் உஷ்ணம் போன்றவை குணமாகும். மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்து.