Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிறைய இடத்துல குடிக்க தண்ணியே இல்ல…. ஆனா இங்க இப்படி போகுதா?.. வேண்டுகோள் விடுக்கும் பொதுமக்கள்….!!

தேனியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்வதால் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மாவட்ட நிர்வாகியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

தேனி மாவட்டதிலுள்ள பெரியகுளம் பகுதியில் கிருஷ்ணன்கோவில்  அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு பின்புறம் பெரிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதிலிருந்து அப்பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இக்கோவிலுக்கு அருகே இருக்கும் குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாக செல்கிறது.

மேலும் வீணாகும் தண்ணீர் அப்பகுதியிலிருக்கும் சாலையோர பள்ளங்களில் தேங்குவதால் அதிலிருந்து கொசுக்கள் உண்டாகி நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையினால் மாநகர நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யக்கோரி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

Categories

Tech |