Categories
அரசியல் மாநில செய்திகள்

‘நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்த இழப்பீடு போதுமானதல்ல’…. பாமக நிறுவனர் ராமதாஸ்….!!!

நெற்பயிர் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர் மழை நீரில் மூழ்கி வீணானது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு அதற்கு உரிய இழப்பீடு வழங்குவோம் என்று அறிவித்து இருந்தது. அதன்படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 5 ஆயிரமும், சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ரூபாய் 25 ஆயிரமும் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அறிவித்த இழப்பீடு போதுமானது அல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் நெல் சாகுபடி செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், மழை, வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர்கள் ஏக்கருக்கு தலா 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Categories

Tech |