Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நெற்பயிர் காப்பீடு திட்டம்….. பதிவு செய்ய கடைசி தேதி எப்போது….? கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீடுகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சம்பா பருவநிலை பயிரிட்டிருக்கின்ற விவசாயிகள் தங்களது நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு வருகிற 15-ம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பா நெல் பயிரிட்ட விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்,  பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள்  மூலமாக 464 ரூபாய் பீரிமியம் தொகை செலுத்தி நெற்பயிரை  காப்பீடு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து இனிவரும் பருவமழை காலங்களில் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்கு அறிவுறுத்தப்படுகின்றார்கள். சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வருகின்ற 15-ம் தேதி கடைசி நாள் என்ற காரணத்தினால் கடைசி நேர கூட்டத்தை தவிர்ப்பதற்காகவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருப்பதற்காகவும் முன்கூட்டியே பதிவு செய்து பயிர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் மோகன் கூறியுள்ளார்.

Categories

Tech |