இயக்குனர் மிலிந்த் ராவ் அடுத்ததாக இயக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நெற்றிக்கண். இந்த படத்தை அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி இந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது.
LetsOTT EXCLUSIVE: We all know @arya_offl is doing a web-series for Amazon Prime.
The thriller series will be directed by Milind Rau of Aval and #Netrikann fame. pic.twitter.com/NAa02UQh2u
— LetsCinema (@letscinema) August 1, 2021
இந்நிலையில் இயக்குனர் மிலிந்த் ராவ் அடுத்ததாக இயக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஆர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அமேசான் பிரைம் ஓடிடிக்காக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. தற்போது ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படம் ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.