Categories
உலகசெய்திகள்

நெற்றியில் கொசு கடித்ததால் உயிரிழந்த பெண்…. அதிர்ச்சி தரும் பின்னணி…. இப்படி ஒரு சம்பவமா….????

பிரிட்டனில் நெற்றியில் கொசு கடித்ததால் பெண் விமானி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள Suffolk என்ற இடத்தை சேர்ந்த Oriana papper என்ற 21 வயது இளம் பெண் பெல்ஜியம் நாட்டில் விமானியாக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவரது நெற்றியில் கொசு ஒன்று கடித்துள்ளது. அந்த இடம் நாளடைவில் வீக்கமடைந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு ஆண்டிபயாட்டிகள் கொடுத்து அனுப்பி வைத்தனர். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து அந்த இளம் பெண் திடீரென மயங்கி விழுந்தார்.

அதனை கண்ட அவரின் காதலர் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் உயிரிழந்து விட்டார்.அதாவது என்ன நடந்தது என்றால் கொசு படித்ததால் அந்த பெண்ணுக்கு நெற்றியில் நோய் தொற்று உருவாகியுள்ளது. அவ்வாறு நோய்த்தொற்றை உருவாக்கிய கிருமிகள் அப்படியே மூளைக்குள் பரவியதை அடுத்து இளம் பெண் உயிரிழந்துள்ளார். இந்த பழக்கினை விசாரித்த விசாரணை அதிகாரி தனது வாழ்நாளில் இப்படி ஒரு விடயத்தை கேள்விப்பட்டதில்லை என்று கூறி அதிர்ச்சி அடைந்தார்.

Categories

Tech |