விஜயை போல் ரஜினி சொதப்பாமல் தெளிவாக செயல்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கிய இத்திரைப்படமானது நேற்று ரிலீஸாகி விஜய் ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தை தந்துள்ளது. ஒரு மாஸ் ஹீரோவுக்கு இப்படி மொக்கை கதையை நெல்சன் சொல்லிவிட்டாரே என ரசிகர்கள் கோபத்தில் இருக்கின்றார்கள். நெல்சன் அடுத்ததாக ரஜினியை வைத்து இயக்க உள்ளார்.
அதில் என்ன பண்ண போகிறாரோ என ரசிகர்கள் பயந்த நிலையில் விஜய் படம் போல ரஜினி திரைப்படம் சொதப்பாது. ரஜினி நெல்சனை அழைத்து கதை கேட்ட போது அவர் கூறிய விதம் பிடித்தது. ஆனால் அவரின் கதை ரஜினிக்குப் பிடிக்கவில்லை. இதன் பின்னர் ரஜினி அவரே ஒரு கதையை சொல்லி திரைக்கதையை தயார் செய்து கொண்டு வாங்க என நெல்சனிடம் கூறியுள்ளார். நெல்சன் எழுதிய கதையை பத்து முறை திருத்தி எழுத வைத்த ரஜினி அதன் பிறகு தனக்கு பிடித்தது போல் கதை அமைந்த பின்னரே நடிக்க ஒப்புக் கொண்டாராம். இதனையடுத்தே சன் பிக்சர்ஸ் பட அறிவிப்பை வெளியிட்டது. ஆகையால் பீஸ்ட் படம் போல் தலைவர் 169 படம் சொதப்பாது நம்பலாம்.