நெல் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் 3,000 ரூபாய் வழங்க கோரி கும்பகோணத்தில் நெல்லினை காவிரி ஆற்றில் கொட்டி விவசாயிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
2020-2021 ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலையை மத்திய அரசு கிலோவுக்கு 53 பைசா உயர்த்தியது. தமிழக அரசு சராசரியாக 60 பைசா ஊக்க தொகையினை அறிவித்தது. விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன்னரகத்திற்கு குவிண்டாலுக்கு 1905 ரூபாயும் போது ரகத்திற்கு 1865 ரூபாயும் வழங்கி வரும் நிலையில் குறைந்தபட்சம் குவிண்டாலுக்கு 3,000 ரூபாய் வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பின்னர் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.