Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லைக்கு வருகை புரியவுள்ள முதல்வர்”…. மும்முரமாக நடைபெற்று வரும் பணிகள்…!!!!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லைக்கு வருகை புரியுள்ள நிலையில் பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

நல திட்ட உதவிகள் வழங்கவும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் வருகின்ற 8-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலிக்கு வருகை புரிய உள்ளார். இந்நிகழ்வானது பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் நடைபெற உள்ளது.

தற்பொழுது இந்நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கப்படுகின்றது. மைதானம் முழுவதும் சீரமைக்கப்பட்டு அங்கே இரும்புத் தூண்கள் நடப்பட்டு அதன் மீது மழை புகாதவாறு தகரங்களால் மேற்கூரை அமைக்கப்படுகின்றது. தற்பொழுது இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றது.

Categories

Tech |