Categories
மாநில செய்திகள்

நெல்லையப்பர் கோவில் அதிசயம்…. வைரலாகும் புகைப்படம்…!!!!!!

நெல்லையப்பர் கோயிலில் நிகழும் அதிசயத்தை காண பல இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து மனம் உருக வேண்டி செல்கின்றனர்.

தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் திருநெல்வேலியில் அமைந்திருக்கும் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலும் ஒன்றாகும். தமிழகத்திலேயே மூன்று மூலவர்களை கொண்ட திருக்கோயிலாக  நெல்லையப்பர் கோயில் மட்டுமே இருக்கிறது. மூலவரான வேண்ட வளர்ந்த நாதர் சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இவரே  நெல்லையப்பர் எனப்படுகிறார். இந்த கோவிலுக்குள் சிவ லிங்கத்தின் மத்தியில் அமைப்பின் உருவம் தெரிகிறது.

இதனை அபிஷேகத்தின் போது மட்டுமே காணமுடிகிறது. சிவனுக்கு சக்தி அடக்கம் என்பதை போல இந்த கோலம் உணர்த்துவதாக சொல்லப்படுகிறது. அதனால் இங்குள்ள சுவாமிக்கு சக்தி லிங்கம் என்ற பெயரும் இருக்கிறது. இது தவிர மகாவிஷ்ணு பூஜித்த லிங்கம் ஒன்றும் மூலவர் சன்னதிக்கு முன்பாக உள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னதியும் அமைந்திருக்கிறது. இந்த கோயில்  முதல் லிங்கம் என கருதப்படுவதால் இவருக்குதான் முதல் பூஜை நடைபெறுகிறது. அதே போல இங்குள்ள மூவருமே மூலவராக வழங்கப்பட்டு வருகின்றனர்.

எனவே இவ்வளவு சிறப்புப் பெற்ற நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் நால்வரும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். இந்த நிலையில் இந்த கோவிலில் வீற்றிருக்கும் காந்திமதி அம்பாள் சன்னதி பின்புறம் உள்ள கணபதி சிலை அருகே உள்ள தோலில் சூரிய வெளிச்சம் படர்ந்து சூலாயுதம் போல காட்சியளிக்கிறது. இந்த காட்சி தற்போது நெல்லை மாவட்டத்தில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறும்போது இது கோயில் வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான். ஆனால் யாரோ ஒருவர் இதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கலாம் என கூறியுள்ளார்.

Categories

Tech |