Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் சத்தியாகிரக போராட்டம்…. கலந்து கொண்ட தலைவர்கள்….!!!!!!!!

டெல்லி மத்திய அமலாக்க துறையினர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சி சார்பில் நேற்று நாடு தழுவிய சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றுள்ளது. நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு நேற்று அமைதி வழி சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றுள்ளது. நெல்லை மாநில மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி  ஆதித்தன் கண்டன உரையாற்றியுள்ளார். மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் உதயகுமார், சிவன் பாண்டியன், வண்ணை சுப்ரமணியன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |