Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் நாய்கள் தொல்லை…! மொத்தமாக தூக்கிய மாவட்ட நிர்வாகம்… என்ன செஞ்சுது தெரியுமா ?

நெல்லையில் மாநகர நல அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் பிடிக்கப்பட்ட அறுபது நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை ஊசி செலுத்தப்பட்டது.

மாநகர நல அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சங்கரநாராயணன், சுகாதாரப் பணியாளர், மதுரையை சேர்ந்த நாய் பிடிக்கும் தனியார் அமைப்பு ஊழியர்கள் அனைவரும் இணைந்து நெல்லை அரசு மருத்துவமனை மற்றும் பல் நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அதிகளவில் சுற்றி திரிந்த 38 தெருநாய்களையும் சீனிவாச நகர் தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்த 22 நாய்களையும்பிடித்து அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று கருத்தடை அறுவை சிகிச்சை ஊசி செலுத்தினர். இந்த தெரு நாய்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு கொடுத்துள்ளது. இதேபோல் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிகின்ற தெருநாய்களையும்  கண்காணித்து வருகின்றன.

Categories

Tech |