நெல்லையில் மகனே தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்த 50 வயது மதிப்புதக்க ஒருவர் நேற்று நள்ளிரவில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
பின் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தவர் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் அருகே இருக்கும் கம்பனேரி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது. இவரின் மகன் மாரி செல்வம் இவர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கின்றார். இதற்கான சிகிச்சை பெறுவதற்காக அவரை திருநெல்வேலியில் இருக்கும் மருத்துவமனைக்கு ஆறுமுகம் அழைத்து வந்திருக்கின்றார்.
இதனால் மகனுடன் புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் ஆறுமுகத்தின் கழுத்தை மாரிச்செல்வம் கத்தியால் அறுத்து கொலை செய்ததோடு சரமாரியாக குத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் போலீசார் மாரிச்செல்வத்தின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.