தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்றும் இன்றும் பெய்த தொடர் மழையின் காரணமாக குண்டாறு, ராமநதி, கடனாநதி மற்றும் கருப்பாநதி போன்ற அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் அடவிநயினார் அணை இன்னும் 3 அடி மட்டுமே நிரப்ப வேண்டியது உள்ளது.
இந்நிலையில் நெல்லை மாநகர பேட்டை பகுதியில் உள்ள ஓடக்கரையில் அப்துல் லத்தீப்( 75)என்பவர் வசித்து வருகிறார். நேற்று தொடர் மழையின் காரணமாக அவரின் வீடு பொதும்பி இருந்தது. அதன் பிறகு நள்ளிரவு 2 மணிக்கு திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதையடுத்து வீடு இடியும் சத்தத்தை கேட்டு அப்துல் உடனடியாக வெளியேறிவிட்டார். எனவே அவர் உயிர் பிழைத்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.