நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1400 ஐ தாண்டியுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்திலும் பல இடங்களில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், நேற்று வரை நெல்லையில் கொரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 1,300 ஆக இருந்தது. ஆனால் இன்று ஒரேநாளில் மேலும் 139 பேருக்கு கொரொனா உறுதிசெய்யப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை 1438 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று வரை நெல்லை மாவட்டத்தில் குணமானவர்களின் எண்ணிக்கை 702 ஆக உள்ளது. இதில் 589 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமாக கையாளப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த தொற்று அதிகரிப்பு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது.