Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்….. மாவட்ட கலெக்டர் அதிரடி….!!!!

அரசு பள்ளி மாணவர்களின் பொது அறிவு மற்றும் ஆங்கில மொழி திறனை வளர்க்க வேண்டும் என்பதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஒரு சிறப்பான சேவை செய்துள்ளார். அதாவது 10 பள்ளிகளில் 10 பிரதிகளை விலை இன்றி வழங்கும் திட்டத்தினை அவர் தொடங்கி வைத்துள்ளார். இதனை மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக ஆங்கில பத்திரிக்கை பிரதிகளை வழங்கி மாணவர் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசியவர் தற்போது தகவல்கள் மொபைல் போன் மூலமாக whatsapp மூலமாக அனைவருக்கும் கிடைக்கின்றது.

16 வயது முதல் 18 வயதுடைய மாணவ, மாணவிகள் பல தகவல்கள் பல முனையில் இருந்து வந்து கொண்டிருக்கும், பயணங்கள் மூலம் பார்க்கப்படும் சுவரொட்டிகள் பேனர்கள் போன்றவற்றைப் போல whatsapp, facebook, instagram பல தகவல்கள் கிடைக்கின்றது. கிடைக்கப்படும் தகவல்களில் எது உண்மை? எது உண்மை இல்லை என்பது அறிவது சிரமம். தரமான நாளிதழ் மூலம் கிடைக்கும் தகவல்கள் நம்பகமானது நாளிதழ்களில் வரும் தகவல்களை மட்டுமே உண்மை என்பதை அறிந்து படிக்கக்கூடிய தகவல்களாக இருக்கும். மொழி என்பது மிகவும் முக்கியம். ஆங்கிலம் என்பது சர்வதேச மொழி. நாளிதழ்களில் வரும் தகவல்களை குறிப்பெடுத்து தொடர்ந்து படித்து வந்தால் பல தகவல்களை நம்மால் அறிய முடியும். மேலும் அரசு பள்ளிகளில் இருக்கும் மாணவ மாணவியர்களின் ஆங்கிலத் திறன் மற்றும் பொது அறிவு திறன் மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் நெல்லை மாவட்டத்தில் 10 அரசு பள்ளிகளில் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது என்று அவர் கூறினார்.

Categories

Tech |