Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நெல்லை அரசு மருத்துவமனையில் விரைவில் கொரோனா வைரஸ் ஆய்வு மையம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் தனது உரையை தொடங்கிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நெல்லை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் ஆய்வு மையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த ஆய்வு மையம் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என்றும் சட்டப்பேரவையில் எம்எல்ஏ மைதீன்கான் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார். மேலும் தென் தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மருத்துவமனைகளில் முதன்மையானது நெல்லை அரசு மருத்துவமனை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.

விவாதத்திற்குப் பின்னர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிடவுள்ளார். மேலும் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிப்பதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.

Categories

Tech |