Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை பல்கலைக்கழகத்தில்…. தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் 1- ஆம் தேதி முதல் நவம்பர் 2022-கான தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வுகளுக்கு 2 மற்றும் 3- ஆம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அபராத கட்டணமின்றி வருகிற 5- ஆம் தேதி வரை இணையவழியில் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம். அபராத கட்டணத்துடன் 7- ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை தேர்வு கட்டணத்தை செலுத்தி இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். இதனை அடுத்து முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் தேர்வு கட்டணத்தை 9- ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை அபராதம் இல்லாமலும், 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை அபராத கட்டணத்துடன் சேர்த்து செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு மற்றும் அதற்குப் பிறகு பல்கலைக்கழக துறைகளில் இளநிலை 2017-ஆம் ஆண்டு, முதுநிலை 2018-ஆம் ஆண்டு, ஆய்வு நிறைஞர் 2019-ஆம் ஆண்டு, முதுநிலை கணினி பயன்பாடுகள் 2017-ஆம் ஆண்டு மற்றும் பட்ட மேல் படிப்புகளில் சேர்ந்து நிறைவு செய்ய முடியாத தனி தேர்வர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது தனி தேர்வர்கள் வரையறுக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் இணையவளியில் தேர்வு கட்டணத்தை செலுத்தி நவம்பர் 2022 தேர்வில் கலந்து கொள்ளலாம். இது குறித்த கூடுதல் விவரங்களை msuniv.ac.in என்ற இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |