நெல்லை மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்படி பள்ளி தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியர் ஜான் கென்னடி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளியின் கட்டிட விபத்து குறித்து உதவி கலெக்டர் தலைமையில் விசாரணை குழு அமைத்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவு பிறப்பித்தார்.
நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை கோட்டாட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு ஆட்சியரிடம் இந்த அறிக்கை சமர்ப்பித்தனர்.