திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்து கடந்ததுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தீவிரம் தலைநகர் சென்னையில் குறைந்து மற்ற மாவட்டங்களில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். இருந்தும் தமிழக அரசாங்கம் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, கொரோனவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் நெல்லையில் இன்று காலை புதிதாக 159 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவர படி 1875 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு, 868பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 996 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 11 பேர் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இன்றைய பாதிப்பால் 2ஆயிரத்தை கடந்து 2026 ஆக உள்ளது. இன்று அதிகபட்சமாக நெல்லை மாநகர பகுதியில் 71 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.